ஆடி அமாவாசையையொட்டி, கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் இன்று கூட வேண்டாம் சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்காத நபர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மாநகர காவல்துறை,
ஆடி அமாவாசையான இன்று, கோயிலுக்கு செல்வதற்கோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கோ, கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு முதல் திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணாசதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரை, கோயில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post