உத்தரபிரதேசத்தில் லாரியும், பேருந்தும் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், லக்னோ – அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம், சாலையோரத்தில் நின்றிருந்த இரட்டை அடுக்கு பேருந்து மீது மோதியது. நள்ளிரவு 1.30 மணியளவில் கொட்டும் மழையில், கனரக வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் மோதியால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் தூங்கி கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், பீகாரில் சொந்த ஊருக்கு திரும்பும்போது விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post