தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கையை தமிழகஅரசிடம், ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் சமர்பித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்தது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி பெறப்பட்ட கருத்துகளை பரிசீலனை செய்த ஆய்வுக்குழு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், நீட் தேர்வு தாக்கம் தொடர்பான, 165 பக்க ஆய்வறிக்கையை இன்று தமிழக அரசிடம், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு சமர்ப்பித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், பெரும்பாலான மாணவர்கள் நீட் வேண்டாம் என்றே கூறியிருப்பதாக தெரிவித்தார். ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
Discussion about this post