ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று என்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க தேர்தல் அறிக்கையில் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது திமுக. அதில் ஒன்று ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தற்போது 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசு மாற்றிப்பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏழு தமிழர் விடுதலை விவகாரம் குடியரசு தலைவர் கையில் இருப்பதாக கூறியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக பதில் அளித்து இருக்கிறார். 7 பேர் விடுதலையில் நிறைய சட்ட சிக்கல் இருக்கிறது என்பதும் அமைச்சரின் விளக்கமாக உள்ளது.
ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, அவற்றை நிறைவேற்றாமல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறிய திமுக, அதனை குறைக்க தற்போது வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டது.
வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியம், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்ற வாக்குறுதிகள் குறித்து திமுக வாயை திறக்கவே இல்லை. பெண்களுக்கு மாநகர அரசு பேருந்துகளில் இலவசம் என்று அறிவித்து விட்டு, சாதாரண பேருந்துகளில் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறி ஏமாற்றியது. இதேபோல தற்போது ஏழு பேர் விடுதலையிலும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக தமிழக மக்களை ஏமாற்றி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செய்தியை காட்சிப்பதிவுடன் கேட்க…
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
Discussion about this post