நீட் தேர்வு, 7.5% இட ஒதுக்கீடு, சசிகலா விவகாரம் என பல்வேறு செய்திகளைக் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றினார். அவ்ர் பேசியதாவது,
- நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களை தெரிந்தே ஏமாற்றி வருகிறது.
- நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.
- நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
- 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் வெறும் 74 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால், 7.5% ஒதுக்கீட்டுக்குப் பிறகு 450 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
- 7.5% இட ஒதுக்கீட்டைக் கெடுக்க திமுக அரசு முயற்சி செய்கிறது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படும்.
- அதிமுக யாரையும் நம்பி இல்லை. இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது.
- புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு உதவியாளராக வேலை செய்ய வந்தவர்தான் சசிகலா. வேலை முடிந்துவிட்டது. அவரும் போய்விட்டார்.
- தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்?
Discussion about this post