சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி, பா.ம.க. வேட்பாளர் கசாலியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, அந்த தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், உதயநிதி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதையும், அவர் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post