கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், பாலாறு வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5 ஆயிரத்து 400 கன அடியும் என, மொத்தம் 10 ஆயிரத்து 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர், தமிழக கர்நாடக எல்லையான பாலாறு வழியாக, மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 ஆயிரத்து 376 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 89 புள்ளி 36 அடியாகவும், நீர் இருப்பு 51 புள்ளி 92 டி.எம்.சியாகவும் உள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக, வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post