ஆளுநர் உரை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேசியது பலராலும் கவனிக்கப்பட்ட உரையாக அமைந்ததுடன், தற்போது சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்விகளை முன்வைத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் மற்றும் 7 உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தன. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரங்கள், தீர்க்கப்படாத மனுக்கள் எவை என்பதையும் வெளியிட வேண்டும்
அதிமுக அரசு அமைத்த ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார வல்லுநர் குழு அறிக்கையையும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் .ஆவின் பால் 3 ரூபாய் குறைத்த நிலையில் அதனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? அதனை அரசே ஏற்குமா என தெளிவுபடுத்த வேண்டும்
Discussion about this post