திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று ஒரு புறம் மக்களை தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், விலைவாசி விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விலைவாசிக்கு முக்கிய காரணமாக விளங்குவது பெட்ரோல், டீசல் விலை உயர்வு எனவும், இது மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை குறைக்க வேண்டும் அல்லது வரி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் திமுக அரசு குறைக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post