போலீசார் பாதுகாப்பு வளையத்தில் இருந்து தப்பிய பிரபல ரவுடி சி.டி. மணி என்ற மணிகண்டனை பிடிக்க முயன்ற போது துப்பாக்கியால் உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பிக்க மேம்பாலத்தின் மீதிருந்த கீழே குதித்த போது கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போட்ட போலீசார், தற்காப்பிற்காக ஏன் திரும்பி சுடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது…
சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் அறிவுரையின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையர் கண்காணிப்பில் தியாகராயர் துணை ஆணையர் ஹரிஹரன் பிரசாத் மேற்பார்வையில் 10ஆம் தேதி இரவு 9-45 மணிக்கு புதுப்பாக்கம் பகுதியில் வீட்டில் இருந்த சி டி மணியை க பத்திற்கும் மேற்பட்ட போலீசார் கைதுசெய்து வைத்திருந்தனர். இந்நிலையில் போலீசார் பிடியில் இருந்து சி டி மணி தனது பி எம்டபள்யூ காரில் தப்பிக்க முற்சித்த போது அவனை பின்தொடர்ந்த வளசரவாக்கம் போலீசார் போரூர் மேம்பாலம் அருகே 2 ஆம்தேதி மதியம் 1:45 மணிக்கு சுத்திவளைத்த போலீசார் பி எம் டபுள்யூ காரில் தப்பித்த சி டி மணியை இறங்க வலியுறுத்த அவன் இறங்காமல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடி வழியாக கையில் வைத்திருந்த 9mm துப்பாக்கியால் சுட்டதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை நோக்கி ஒருமுறை சுடத் தொடங்குகிறார். மற்றொரு குண்டு சுட்டதில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கையில் காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் காரில் இருந்து தப்பிக்க முற்பட்ட சி டி மணியை போலீசார் விரட்ட போரூர். மேம்பாலத்தின் மீதிருந்து கிழே குதித்ததில் கால் கை மற்றும் கால் உடைந்தது. இந்த நிலையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாவுகட்டு போட்டுக்கொண்டு சிகிச்சையில் உள்ளார் சி டி மணி…
கைதுசெய்யப்பட்டு சிகிச்சையில் உள்ள சி டி மணி மீது ஆள் கடத்தல், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து சி.டி மணி மீது வழக்குகள் பாய்ந்தன. அவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சி.டி மணியின் பி எம் டபள்யூ கார் மற்றும் துப்பாக்கி 2 பிஸ்டல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்…
குற்றவாளிகளை பிடிக்கும் போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் சுடக்கூடிய காவல்துறை ரவுடி ஒருவர் துப்பாக்கியை பயன்படுத்திய பிறகும் இவர்கள் ஏன் தற்காப்புக்காக கூட சுடவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதில் சி டி மணி துப்பாக்கி குண்டால் காயமடைந்த. உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவாள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்…
சி டி மணியின் தந்தை பார்த்தசாரதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 1தேதி இரவு ஒன்பது 45 மணிக்கு புது பக்கத்தில் உள்ள தனது மூத்த மகன் மணிகண்டனை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவனிடமிருந்த இரண்டு கார்கள், ஒரு லேப்டாப், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். அவர்கள் காவல் துறையினரா என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தனது மகனை மீட்டுத் தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளார்…
Discussion about this post