டெல்லியில் உள்ள சாவ்லா டவுன் பகுதியில் கார்பரேசன் வங்கி செயல்பட்டு வருகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு முகமூடி அணிந்த 6 கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் முதலில் வங்கிக் காவலாளியை தாக்கி அவரடம் இருந்த துப்பாக்கியை பறித்துக்கொண்டனர். பின்னர் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து வங்கி கேஷியர் சந்தோஷ்குமாரிடம் இருந்து பனத்தை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் கொள்ளையர்களுடன் போராட்டியதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். பின்னர் பணத்தை வாரியெடுத்துக்கொண்ட கொள்ளையர் உடனடியாக அங்கிருந்து தப்பினர்.
இந்த சம்பவத்தில் வங்கி கேஷியர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே மரணம்டைந்தார். சாவ்லா நகர் போலீசார் தகவல் அறிந்து உடனடியாக அந்த இடத்துக்கு வந்து வங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.நடந்த சம்பவத்தை பொதுமக்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் கேட்டறிந்தனர்.
இதனிடையே கொள்ளை போன பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது. நடந்த சம்பவங்கள் அனைத்தும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடைசி தகவலாக கொள்ளையர்களில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post