விழுப்புரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், காணைகுப்பத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வந்ததால், சேதமடைந்த மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்துவிட்டன.
தகவலறிந்த விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வீணான நெல் மூட்டைகளை கண்டு வேதனை அடைந்த விவசாயிகள், சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மற்ற நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post