தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேலை உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post