கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல், மின் மயானங்களிலும், இடுகாடுகளிலும் உறவினர்கள் பலமணி நேரமாக காத்துக் கிடக்கின்றனர்.
எந்தவித முன்னேற்பாடுகளிலும் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி இடுகாட்டில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய 2 நாட்களுக்கு மேலாக உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
நாகல்கேணி மயானத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
10க்கும் மேற்பட்ட உடல்களுடன் இறந்தவர்களின் உடல்கள் காத்திருப்பதாகவும், ஆனால் மயான ஊழியர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
அம்பத்தூர் மின்மயானத்தில், இறந்தவர்களின் உடலுடன் பல மணி நேரம் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
இரண்டு எரியூட்டும் இயந்திரங்களில் ஒன்று பழுதாகி உள்ள நிலையில், ஒன்று மட்டுமே இயங்கி வருவதாலும், அதிகளவு உடல்கள் வருவதாலும் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூட்டத்தை சமாளிக்க டோக்கன் வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் எரியூட்டும் மையத்திற்கு வெளியே தகன மேடை அமைத்து, விறகுகளைக் கொண்டும் 6க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
Discussion about this post