சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 3 பேர், மூச்சுத்திணறி உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளது.
இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாததால், நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்சுகளில் சிலிண்டர்களில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்து போனதால், நேற்று 6 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மேலும் 3 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சிலேயே உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்படுகிறது.
Discussion about this post