ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலையில், அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் அதற்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என கண்ணீரோடு காத்திருக்கிறார்கள் பொதுமக்கள்.
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மருத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் ரெம்டெசிவர் மருந்துக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருத்துவர் பரிந்துரைத்த எண்ணிக்கையை விட குறைந்த அளவே ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.
மருந்து பெற வரும் பொதுமக்கள் செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என்று அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே செங்குன்றத்தில், இருசக்கர வாகனத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினேஷிடம் இருந்து 2 ரெம்டெசிவிர் மருந்துகள், 6 6 நினாவர் தடுப்பூசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளச்சந்தையில் 23 ஆயிரம் ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்வதாக தெரிவித்த தினேஷை கைது செய்த போலீஸார், மருந்துகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்து கிடைத்துவிடாதா என்று பலரும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மறுபுறம் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.
Discussion about this post