கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன் படி வரும் 10 அம் தேதி முதல், 24 ஆம் தேதி காலை 4 மணி வரை சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ – பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு, தனியார் பேருந்துகள் மட்டுமல்லாது, கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட வணிக வளாகங்கள் ஷாப்பிங் மால்கள் இயங்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது. ஊரடங்கு கால கட்டத்தில் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி கிடையாது. உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், டாஸ்மாக் பார்கள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை. அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், அருங்காட்சியங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது. நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post