கிண்டி கிங்க்ஸ் மருத்துவமனையில் மொத்தம் உள்ள 525 படுக்கைகளில், 37 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் உள்ள 450 படுக்கைகளில், 21 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மொத்தம் உள்ள ஆயிரத்து 618 படுக்கைகளில், 374 படுக்கைகளும், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மொத்தம் உள்ள 575 படுக்கைகளில், 25 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் மொத்தம் உள்ள ஆயிரத்து 200 படுக்கைகளில், 40 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. சென்னையில் உள்ள 15 மையங்களில் மொத்தம் உள்ள 5,660 படுக்கைகளில், 2,484 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது. இதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பெரும்பாலான இடங்களில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் பெரும்பாலும் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post