கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கையை துவங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ சிகிச்சை பயன்பாட்டுக்கு தேவையான ஆக்சிஜன், கொரோனா சிகிச்சை, தடுப்பூசிகள் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது ஆக்சிஜன் சப்ளை, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
கொரோனாவின் மூன்றாவது அலை வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை சமாளிக்க தயாராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மூன்றாவது அலை குழந்தைகளை பெருமளவில் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறும் நிலையில், அதனை சமாளிக்க இப்போதிலிருந்தே நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், குழந்தைகளுக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது பெற்றோரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்,
பெற்றோருக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Discussion about this post