சங்ககிரியில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து 700 க்கும் அதிகமான மனுக்கள் பெற்றார். இவற்றில் 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
பின்னர் 52 லட்சத்து, 77 ஆயிரத்து 977 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா திட்டத்தைப் போல கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்றார்.
Discussion about this post