மத்திய குடும்பம் மற்றும் சுகாதார நலத்துறை அமைச்ச ஜே.பி. நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மற்றும் சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல் உருவாக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முன் முதலீட்டு திட்டத்திற்கான அறிக்கை இ.ஃப்.சியில் இருந்து அனுப்பப்பட்டு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,எய்ம்ஸ் மருத்துவமனைகான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டதாக கூறினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட வருகை தர உள்ளதாகவும், மேலும், செங்கல்பட்டில் நடைபெற்று வரும் எச்.எல்.எல். மெடிபார்க் திட்டமும், திருநெல்வேலி, தஞ்சாவூர்,மதுரை ஆகிய இடங்களில் 150 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி காம்ப்ளக்ஸ் பணிகளும் இறுதிகட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து தொடக்க விழாவிற்கான தேதியை அறிவிக்க உள்ளதாக கூறினார்.
Discussion about this post