கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், சென்னையில் முகக்கவசம் அணிவது, குறைந்து வருவதாக ஐ.சி.எம்.ஆர் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது. இதே போல், குடிசைப் பகுதிகளில் 79 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 71 சதவீதம் முகக்கவசம் அணிவதில்லை எனவும் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 9 வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வில், 51 சதவீதம் பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்று கூறப்பட்டள்ளது.
Discussion about this post