சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பது, கடைகள், வணிக வளாகங்களின் முகப்புகளில் கிருமி நாசினி வைப்பது, உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறை நிபந்தனைகளை மீறுபவர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கும், முறையாக முகக்கவசத்தை அணியாதவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.பொது இடங்களில் எச்சில் துப்புவது, பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்க தவறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்களில், அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிமுறைகளை கடைப்பிடிக்காத தனிநபர்களுக்கு 500 ரூபாயும், கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளை மீறுபவர்களுக்கு அபராதமும், தொடர்ந்து 2 முறைக்கு மேல் விதிகளை மீறினால் நிறுவனம், கடைகள், அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
முகக்கவசம், பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பது, கடைகள், வணிக வளாகங்களின் முகப்புகளில் கிருமிநாசினி அவசியம் கொரோனா தனிமைப்படுத்துதல் நிபந்தனைகள் மீறுபவர்களிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்
முகக்கவசம் அணியாதவர்களுக்கும், முறையாக முகக்கவசத்தை அணியாதவர்களுக்கும் ரூ.200 அபராதம் பொது இடங்களில் எச்சில் துப்புவது, பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்க தவறினால் ரூ.500 அபராதம்
முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்களில் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் ரூ.5,000 அபராதம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிமுறைகளை கடைப்பிடிக்காத தனிநபர்களுக்கு ரூ.500, கடைகளுக்கு ரூ.5,000 அபராதம்
“2 முறைக்கு மேல் விதிகளை மீறும் நிறுவனம், கடைகள், அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்படும்” தனிநபர், கடைகள், அலுவலகம், வணிக வளாக உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின் படி ஒத்துழைப்பு வழங்க கேரிக்கை
Discussion about this post