தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனையொட்டி, ஜனவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேர் இடம்பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, 1 லட்சத்து 95 ஆயிரத்து 509 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955ஆக உள்ளது.
ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும்,
பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 39ஆயிரத்து 112 பேரும்,
மூன்றாம் பாலினம் 7,192 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில், அதிகபட்சமாக 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 பேர் உள்ளனர்.
குறைந்தபட்ச வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இதில், 1 லட்சத்து 75 ஆயிரத்து 770 பேர் உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும், 40 லட்சத்து 57 ஆயிரத்து 061 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
5 லட்சத்து 30 ஆயிரத்து 983 பேருடன், குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது.
Discussion about this post