அசாமில் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு மாநிலங்களில் காலை முதலே வாக்காளர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனிடையே, மேற்கு வங்கத்தின் கேஷ்பூரில் ((keshpur)) வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் தொண்டரை சுமார்15 பேர் சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். பாஜகவை சேர்ந்த ரவுடிகள் இந்த கொலையை செய்ததாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. அதே போல, பாஜகவை சேர்ந்த பெண் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதுடன் பாஜக பிரமுகர் ஒருவரின் காரையும் அடித்து நொறுக்கினர். காயமடைந்த பாஜக பெண் பிரமுகர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே, நந்திகிராம் தொகுதியில், உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநரிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்
Discussion about this post