சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில், வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும், இதில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஐந்து நாட்களுக்கு முன்பாக, அனைத்து வாக்காளர்களுக்கும், தகவல் சீட்டு விநியோகிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post