புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று கொண்டார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்று கொண்டார். துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, ஆளுநராக இருந்து பயிற்சி பெற்றதன் அடிப்படையில் துணை நிலை ஆளுநர் அதிகாரம் தனக்கு தெரியும் என தெரிவித்தார். மக்களுக்கான ஆளுநராக இருப்பேன் எனவும் உறுதியளித்தார்.
Discussion about this post