சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தேர்தல் ஆணையம், கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கு வழங்கியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post