2021-ம் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பு, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினர்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று சொந்த தொகுதியில் பிரசாரம் துவங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,எடப்பாடி தொகுதிக்குட்பட்ட, பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் சற்று தூரம் நடந்து சென்ற முதலமைச்சர், பெரியசோரகையில் கட்டப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post