சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதி தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆ.ராசா முன்வைத்துள்ளதாக சாடிய வழக்கறிஞர் ஜோதி, உண்மை நிலையை தெளிவுப்படுத்தியதுடன், விவாதத்துக்கு வருமாறும் ஆ.ராசாவுக்கு வழக்கறிஞர் ஜோதி சவால் விடுத்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் விடுதலை செய்திருந்ததை சுட்டிக்காட்டிய ஜோதி, ஜெயலலிதா இறந்து, 80 நாட்களுக்கு பின்னரே இறுதி தீர்ப்பு வெளிவந்ததாகவும் கூறினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் தவறாக குறிப்பிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அவர், உச்சநீதிமன்றத்திற்கு தெரியாத சட்டம், ஆ.ராசாவுக்கு தெரிந்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
துளியும் உண்மையின்றி, முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, சொடக்கு போட்டு பேசுவது தான் பண்பாடா? தரக்குறைவாக பேசுவது தான் தமிழக அரசியல் நாகரீகமா? என்று அடுக்கடுக்கா கேள்விகளை எழுப்பிய அவர், இதற்கு எல்லாம் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post