திரூப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது கரூர் மாவட்டத்தை வந்தடையும் என்பதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை ஆற்றில் மேய்க்க செல்லவோ வேண்டாம் என தண்டோராம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post