புரெவி புயல் தென் தமிழகத்தை தாக்க உள்ள நிலையில், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினர் எச்சரிக்கை செய்தனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் நாளை மறுநாள் அதிகாலை கன்னியாகுமரி பாம்பன் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து கடலில் எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு, ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 16 படகுகளை சேர்ந்த மீனவர்கள், கர்நாடக மாநிலம் மால்பே மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல கர்வார் மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு படகைச் சேர்ந்த மீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post