வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல், தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் இரவு கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், சில சமயங்களில் 140 கிலோ மீட்டர் வரையும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். புயல் காரணமாக 9 மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Discussion about this post