சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் 3 முறையாக காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கு சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்- காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி மூன்றாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சி.பி.ஐ. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில், விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ . பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post