ஹத்ராசில் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, உயிரிழந்த பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என உத்தரபிரதேச மாநில கூடுதல் டி.ஜி.பி. பிரசாத் குமார் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில், செப்டம்பர் 14ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 19 வயது இளம்பெண், செவ்வாய்கிழமை டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில், கழுத்து எலும்பில் ஏற்பட்ட காயத்தால் மட்டுமே இளம்பெண் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என உத்தரபிரதேச மாநில கூடுதல் டிஜிபி பிரசாத் குமார் விளக்கமளித்துள்ளார். வகுப்புவாரி பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், கொல்லப்பட்டப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் சிலர் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொய் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post