8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேரின் இடைநீக்க நடவடிக்கையை திரும்பப் பெறாவிட்டால் நாடாளுமன்ற கூட்டத் தொடரைப் புறக்கணிக்கபோவதாக மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இதேபோல், குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக, பயிர்களை தனியார் கொள்முதல் செய்வதை தடுக்கும் சட்டமுன்வரைவை மத்தியஅரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன் காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவையில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக அவைக்கு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
Discussion about this post