நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு, மறு தேதியில் தேர்வு நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, செப் 13ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பல்வேறு தரப்புகளில் இருந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அனைத்து வழக்குகளுமே தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மாணவ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், செப் 13ஆம் தேதி, நீட் தேர்வை நடத்துவதில் எந்த ஆட்சேபமில்லை என்றும் அதே சமயம் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு எழுதுவதற்கு அனுமதி தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக்பூஷன் அமர்வு அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, மனு ஏற்புடையதல்ல என்று தெரிவித்து தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Discussion about this post