உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக்குறைவால் தனது 78-வயதில் காலமானார்.
சிவகங்கை மாவ்ட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் சட்ட ஆணையத்தின் தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தார். பொது இடத்தில் புகைப் பிடிக்க தடை விதித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவர் ஏ.ஆர்.லட்சுமணன். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னை உள்ளிட்ட நான்கு இடங்களில் உருவாக்கப்பட வேண்டுமென பரிந்துரைத்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவர் தேவக்கோட்டையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மீனாட்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.லட்சுமணன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். ஏ.ஆர்.லட்சுமணின் உடல் அவரது சொந்த ஊரான தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது மகன் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவராகவும் உள்ளார்
Discussion about this post