கொடநாடு விவகாரத்தில், மான நஷ்டஈடு கோரி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி மேத்யூ சாமுல்வேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி மாத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மேத்யூ சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், முதலமைச்சர் தொடர்ந்த வழக்குக்கு மேத்யூ சாமுவேல் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post