பலத்த மழை எச்சரிக்கையால், கேரளாவில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அரபிக் கடலில் உருவாகும் புயலால் கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாளை மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளா விரைந்துள்ளனர். இந்தநிலையில், பலத்த மழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
20 அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Discussion about this post