சென்னையில் மைக்ரோ அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தொற்று பரவல் குறைய தொடங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் உள்ள, சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தில், அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று பரவல் 24 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஆக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மைக்ரோ அளவில் பல்வேறு களப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக நல்ல முடிவு கிடைத்துள்ளதாகவும், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். அரசின் அறிவுரைகளை மக்கள் கடைபிடிப்பதன் மூலம் நோய்த்தொற்று இல்லை என்ற நிலைக்கு கொண்டு வர முடியும் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா இல்லாத சூழலை உருவாக்குவதே அரசின் லட்சியம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Discussion about this post