ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக்கவசத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரத்தை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் கண்டுபிடித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கேடயமாக முகக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் முக்கியமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் சில நேரங்களில் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களை, புற ஊதாக்கதிர்கள் மூலம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், நவீன எந்திரத்தை அரசு மருத்துவர் பன்னீர்செல்வம் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஆயிரம் ரூபாய் செலவிலேயே இவர் கண்டுபிடித்துள்ள முறையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டி வடிவ கருவியில், முகக்கவசம் மட்டுமின்றி செல்போன், வாட்ச், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களையும் வைத்து கிருமி நீக்கம் செய்ய முடியும். இதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
Discussion about this post