சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவருக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கில், தலைமைக் காவலர் ரேவதி, காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையிலேயே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தலைமை காவலர் ரேவதிக்கு, சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
Discussion about this post