கோவையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண், இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றுவதுடன் தனது மருத்துவச் செலவையும் கவனித்து வருகிறார்.
கோவை மாவட்டம் செல்லப்பக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஜோதிமணிக்கு பிறவியிலேயே ஒரு சிறுநீரகம் இல்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஜோதிமணியின் தந்தை, அவரது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இந்நிலையில் வயதான தாயாருடன் வசித்து வரும் அவர், இளநீர் விற்று பிழைப்பு நடத்தி வருவதுடன் தனது மருத்துவச் செலவையும் கவனித்துக் கொள்கிறார்.
ஒற்றை சிறுநீரகத்துடன் பிறந்து, 14 வயதில் தந்தையை இழந்து பல துயரங்களை அனுபவித்து விட்டதாக தெரிவிக்கும் ஜோதிமணி, மருத்துவத்திற்காக அதிக பணத்தை செலவழிப்பதாகவும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்
பல துன்பங்களை அனுபவித்தாலும், ஒற்றை ஆளாய் நின்று போராடி வரும் ஜோதிமணி தமிழக அரசு தனக்கு தன்னுடைய மருத்துவச் செலவுக்கு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post