முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி 91 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 லட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 20 லட்சத்து 54 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுரையில் நிவாரணத் தொகை வழங்கும் பணி 42 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 39 ஆயிரம் குடும்ப அட்டைதார்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரணத் தொகை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது நிவாரண தொகைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post