சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 109 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செங்கோட்டையைச் சேர்ந்த வீரவாஞ்சிநாதன், கடந்த 1911 ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி நெல்லை ஆட்சியராக இருந்த ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு வீரமரணம் அடைந்தார். அவரது நினைவுநாளை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில், அவரது மார்பளவு சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வீர வாஞ்சிநாதன் பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணனும் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Discussion about this post