முகக்கவசங்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க மூன்று லேயர் முக கவசம், N95, காட்டன் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை முக கவசம் என, பல வித முகக்கவசங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்நிலையில், பொது மக்கள் எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம், முக கவசம் காலாவதியாகும் தேதி போன்ற விதிகளை உருவாக்கக் கோரி, சென்னையை சேர்ந்த ரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளிவைத்தனர்.
Discussion about this post