14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மாதத் தவணையாக 6 ஆயிரத்து 157 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
15 ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தப்படி அதிகாரப்பகிர்வு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மாத தவணையாக 6 ஆயிரத்து 157 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜுன் மாதத்தில் மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய நிதி பகிர்வாக தமிழகம் உள்ளிட்ட14 மாநிலங்களுக்கு என மொத்தம் 6 ஆயிரத்து 157 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 335 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகளவாக கேரள மாநிலத்திற்கு ஆயிரத்து 276 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திற்கு 631 கோடியும், ஆந்திராவுக்கு 491 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு 37 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post