சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை அடைத்து விற்க பயன்படும் பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2018-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த அரசாணையை எதிர்த்து ப்ளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் எனவும், விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதனடிப்படையில் ப்ளாஸ்டிக் தடை அரசாணையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post