திருப்பதி திருமலையில் வரும் 10ம் தேதி முதல், உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும் 8-ம் தேதி முதல், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, தேவஸ்தான ஊழியர்கள் 500 பேரை பயன்படுத்தி, ஒரு மணி நேரத்தில் எத்தனை பேருக்கு சமூக இடைவெளியுடன் தரிசன வாய்ப்பு வழங்க முடியும் என்பதற்கான சோதனை நடத்தப்பட்டது. பின்னர் செய்யதியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில், தேவஸ்தான ஊழியர்களுக்கும், 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கும் அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். 11 ம் தேதியில் இருந்து, ஆன்லைன் டிக்கட் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் காலை 6.30 மணி முதல், மாலை 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
Discussion about this post